மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்| ” எந்த அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை" - தமிழக அரசு கொடுத்த விளக்கம்

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசு, அரிட்டாபட்டி
தமிழக அரசு, அரிட்டாபட்டிpt web
Published on

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம், உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய 2015 ஹெக்டேர் அதாவது சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பை, வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங் நிறுவனம் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமம் சுரங்கம் அமைப்பதற்காக ஏலத்தில் எடுத்திருக்கிறது.

கடந்த 07.11.2024 அன்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு & ஒழுங்குமுறை சட்டத்தின் (Mines and Minerals Development and Regulation Act 1957) கீழ் நடத்தப்பட்ட நான்காவது ஏலத்தில் மதுரை மேலூர் நாயக்கர்பட்டி பகுதி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை ஹிந்துஸ்தான் நிறுவனம் எடுத்துள்ளது.

ஒன்றிய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த ஏலம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசுக்கு இதில் நேரடியாக எந்த பங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை எம்பி சு வெங்கடேசன் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதமும் எழுதி இருந்தார். அதில், “பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டியைச் சேர்ந்த மொத்த பரப்பும் தற்போது ஏலம் விடப்பட்டுள்ள கனிமத் தொகுதியின் 2015.51 எக்டர் பரப்பிற்குள் வருகிறது. இங்கு பல வரலாற்றுச் சின்னங்களும் உள்ளன.

தமிழக அரசு, அரிட்டாபட்டி
மணிப்பூர் வன்முறை குறித்த பதிவுக்கு கட்டுப்பாடு - FB-க்கு எதிராக கொந்தளித்த 13வயது காலநிலை ஆர்வலர்!

இப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் சூழல் மற்றும் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த நிலப்பரப்பு அழியும் என்பதாலும் வேளாண்மை, மேய்ச்சல் உள்ளிட்டவையும் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடுமையான சூழல் சீர்கேடுகள் ஏற்படும் என்பதால் இக்கனிமத் தொகுதியை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஏலத்தில் வழங்கியதை ரத்து செய்வதோடு அடுத்தகட்ட ஏலங்களிலும் இப்பகுதியை இடம்பெறச் செய்யக்கூடாது என துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அமைச்சர் பொன்முடியும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக வனத்துறையிடம் அனுமதி கேட்கும்போது திட்டத்தை நிராகரிக்க தமிழக அரசு வலியுறுத்தும் என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு, அரிட்டாபட்டி
டங்க்ஸ்டன் சுரங்க ஏலம் | ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி சு. வெங்கடேசன் கடிதம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com