”என்ன சித்தா சவுண்ட் கிழியுதா..” - களைக்கட்டிய விநோத குழாய் ஒலிபெருக்கி போட்டி! எங்க தெரியுமா?

பெரும்பாலும் கோயில் திருவிழாக்களில் இந்த குழாய் ஒலிபெருக்கிகளை பார்த்திருப்போம். அதிலிருந்து அதிர்ந்து ஒலிக்கும் பாடல்களையும் கேட்டிருப்போம். இந்த குழாய் ஒலிபெருக்கிகளை வைத்து தான் தேனியில் ஒரு வித்தியாசமான போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேனி
தேனிமுகநூல்
Published on

செய்தியாளர்: பிரசன்னா

தனிநபர் போட்டி, குழு போட்டி என சர்வதேச அரங்கில் பல்வேறு போட்டிகளை கண்டு களித்திருப்போம். ஜல்லிக்கட்டு, ரேக்ளா, குதிரை பந்தயத்தை கூட கண்டு களித்ததுண்டு. ஆனால் பலருக்கும் பரீட்சையமில்லாத அதிக சத்தத்துடன் நடைபெறும் போட்டி குறித்துதான் தற்போது காணவிருக்கிறோம்.

பெரும்பாலும் கோயில் திருவிழாக்களில் இந்த குழாய் ஒலிபெருக்கிகளை பார்த்திருப்போம். அதிலிருந்து அதிர்ந்து ஒலிக்கும் பாடல்களையும் கேட்டிருப்போம். இந்த குழாய் ஒலிபெருக்கிகளை வைத்து தான் தேனியில் ஒரு வித்தியாசமான போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள ஒலிபெருக்கி உரிமையாளர்கள், தங்கள் பந்தய இடத்தில் ஒலிபெருக்கிகளை கட்டி பாடல்களை ஒலிக்க விட வேண்டும். 200 மீட்டருக்கு அப்பால் உள்ள நடுவர்கள் வெற்றியாளர்களை தீர்மானிப்பர். இதுதான் போட்டி.

திருவிழாக்களில் ஒரு ஒலிபெருக்கியே தெருவை அலறவிடும் நிலையில், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், கம்பம் மெட்டு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், திறந்தவெளியில் இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேனி
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்தைய குழாய் ஒலிபெருக்கி முதல் இந்த காலக்கட்டத்தில் வடிமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் வரை போட்டியில் இடம்பெற்றிருந்தன. சுமார் 100 மைக் செட் உரிமையாளர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். குழாய் ஒலிபெருக்கிகள் குறித்தும் இந்த போட்டியின் அனுபவத்தையும் உற்சாகம் குறையாமல் கூறுகிறார்கள் மைக் செட் உரிமையாளர்கள்.

குழாய் ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக அவர்கள் வருந்தவும் செய்கின்றனர். ஒலிபெருக்கி உரிமையாளர்களின் உற்சாகம் இந்தப் போட்டியோடு முடிந்துவிடாமல், அவர்களது வாழ்விலும் தொடர வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com