“சொந்த கார் கூட இல்லை... 9 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனாளி” – வேட்புமனுவில் டிடிவி தினகரன் தகவல்

டிடிவி தினகரன் 9 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனாளி என்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய அபராத தொகை பாக்கி ரூ.28 கோடி எனவும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran
TTV Dhinakaranpt desk
Published on

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

தேனி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள், வேட்பு மனுவோடு அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இடம் பெற்றுள்ளன.

டிடிவி தினகரன் தாக்கல் செய்த பிரமாண பத்திரம்
டிடிவி தினகரன் தாக்கல் செய்த பிரமாண பத்திரம்pt desk

அதன் மூலம் நமக்கு தெரியவரும் தகவல்கள், இதோ...

  • டிடிவி தினகரனின் கை இருப்பு ரூ.54,825

  • ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்தி 87 ஆயிரத்தி 870 ரூபாய். (கடந்த 2012 - 2023 வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்கு)

  • அசையும் சொத்து மதிப்பு ரூ.19,82,973.

  • அசையா சொத்து மதிப்பு ரூ.57,44,008.

  • வாகனம் எதுவும் இல்லை.

  • வங்கி உள்ளிட்ட இதர நிறுவனங்களில் உள்ள கடன் ரூ.9,25,029.

  • அதேபோல், அந்நிய செலாவணி ஒழுங்கு முறைச் சட்டப்படி அரசுக்கு செலுத்த வேண்டிய அபராத தொகை பாக்கி ரூ.28 கோடி.

  • குற்ற வழக்குகள் 6, இதர வழக்குகள் 3. எந்த வழக்கிலும் தண்டனை இல்லை.

- இவ்வாறு அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TTV Dhinakaran
பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியமா?
TTV Dhinakaran
TTV Dhinakaranfile

டிடிவி தினகரனின் மனைவியின் சொத்துக்கள் பற்றிய தகவலும் அந்த பிரமாண பத்திரத்தில் இடம் பெற்றுள்ளன. அதன்படி,

  • டிடிவி தினகரனின் மனைவி அனுராதாவின் கையிருப்பு ரூ.21,804

  • ஆண்டு வருமானம் ரூ.25,21,020

  • அசையும் சொத்தின் மதிப்பு ரூ.1,69,25,118.

  • அசையா சொத்தின் மதிப்பு ரூ.2,48,79,707

  • வாகனம் - ஸ்கார்பியோ, மதிப்பு ரூ.8,96,323

  • தங்கம் 1,024 கிராம்

  • வைரம் 37.32 கிராம்

  • வங்கி உள்ளிட்ட இதர நிறுவனங்களில் உள்ள கடன் ரூ 22,87,960.

  • குற்ற வழக்குகள் இல்லை

- இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com