“சென்னையில் வருகிறது ஏழுமலையான் கோவில்”  - திருப்பதி தேவஸ்தானம்

“சென்னையில் வருகிறது ஏழுமலையான் கோவில்”  - திருப்பதி தேவஸ்தானம்
“சென்னையில் வருகிறது ஏழுமலையான் கோவில்”  - திருப்பதி தேவஸ்தானம்
Published on

சென்னையில் பெரிய மற்றும் விசாலமான ஏழுமலையான் கோயில் ஒன்றை கட்டுவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ஒய்.வி ரெட்டி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரெட்டி, “சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்கின்றனர். அதனால் சென்னையில் பெரிய ஏழுமலையான் கோயில் கட்ட திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கலந்தாலோசித்த பிறகு விரைவில் அதற்கான நடவடிக்கையில் இறங்குகிறோம். ஏற்கனவே கன்னியாக்குமரியில் கோயில் கட்டியுள்ளோம். இருந்தாலும் சென்னையில் பெரிய மற்றும் விசாலமான கோயிலை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கான இடம் தேவைப்படும் பட்சத்தில் ஆந்திர முதலமைச்சர் தமிழக அரசிடம் பேசுவார்” எனத் தெரிவித்தார். 

இதுகுறித்து சென்னை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தின் தலைவர் கிருஷ்ணா ராவ் பேசுகையில், “சில வருடங்களுக்கு முன்பு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெரிய கோவில் கட்டுவதற்கு சென்னையில் இடம் தருவதாக உறுதியளித்தார். ஆனால், அது நடக்கவில்லை. தற்போது நாங்கள் மீண்டும் இடத்திற்காக காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com