மாற்றுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் - மீண்டும் பயன்பாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள்..?

மாற்றுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் - மீண்டும் பயன்பாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள்..?
மாற்றுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் - மீண்டும் பயன்பாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள்..?
Published on

தமிழகத்தில் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கள்ளச்சந்தை மூலம் நெகிழிப் பொருள்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம், சட்டபேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2019 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நெகிழித் தடை‌ அமலுக்கு வரும் என அறிவித்திருந்தார். மறுசுழற்சி செய்ய முடியாத, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களான பிளாஸ்டிக் தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் குவளை உள்ளிட்ட 14 பொருள்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இதற்கு நெகிழி தயாரிக்கும் தொழிற்சாலைகள், சிறு குறு வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இருப்பினும் நெகிழியின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டது. பின்னர் தடையை மீறிப் பயன்படுத்தப்பட்ட பல டன் அளவிலான நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் கள்ளச்சந்தை மூலம் மீண்டும் நெகிழி பொருள்கள் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, நெகிழி மறுசுழற்சி குறித்து கொள்கைத் திட்டம் இல்லாததால் அண்டை மாநிலங்களிலிருந்தும் நெகிழிகள் வருகின்றன.

மேலும் அதற்கான மாற்றுப் பொருளும் போதுமான அளவு இல்லாததால் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதாகவும் குற்றச்சாட்டுகின்றனர். எனவே மக்காத தன்மை கொண்ட நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து, மக்கள் அப்பொருள்கள் தவிர்ப்பது அவசியமாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com