திருச்சி: திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவுக்கு பிரமாண்ட நீச்சல் குளம் - வீடியோ

திருச்சி: திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவுக்கு பிரமாண்ட நீச்சல் குளம் - வீடியோ
திருச்சி: திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவுக்கு பிரமாண்ட நீச்சல் குளம் - வீடியோ
Published on

திருச்சி திருவானைக்காவல் யானை அகிலாவிற்கு கோயில் நிர்வாகம் சார்பில் 6 அடி ஆழத்தில் மிகப்பெரிய கிணறு போன்ற அமைப்பில் நீச்சல் குளம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

திருவானைக்காவல் கோவில் யானை அகிலா குளிப்பதற்கு பிரத்யேகமாக 21அடி நீளம் 21அடி அகலத்தில் கிணறு போன்ற நீச்சல் குளம், திருவானைக்காவல் கோவிலின் உள்ளே உதவி ஆணையர் மாரியப்பன், கட்டித் தந்துள்ளார். கோவிலின் உள்ளே நாச்சியார் தோப்பு பகுதியில் யானை நீராடுவதற்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

இதையடுத்து யானை அகிலா, நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. ஏற்கெனவே யானைக்கு ஷவர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 அடி ஆழத்தில் உள்ள இந்த தொட்டியில் இரண்டரை அடி வரை தண்ணீர் நிரப்பி நின்றும் படுத்தும் தண்ணீரில் குளித்து விளையாடி வருகிறது யானை அகிலா.

யானை குளிக்க செல்லும் பாதையில் 12 அடி அகலத்தில் சாய்தள பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே யானை நடை பயிற்சி மேற்கொள்ள மண்தரையும் அமைத்து தரப்பட்டுள்ளது. தற்போது கோவிட் தொற்று என்பதால் திருவிழா போன்ற வைபவங்களுக்கு யானை வெளியே வராத நிலையில், கோவில் வாளத்திலேயே நடைப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com