ஜல்லிக்கட்டிற்கு தடை நேராத வகையில் சட்டத்திருத்தம் வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா மாநிலங்களவையில் தனி நபர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
அத்தீர்மானத்தின் மீது உரையாற்றிய அவர், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்காக சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் அமைதியாக அறவழியில் போராடினர்கள் எனக் கூறினார். கலாசாரம், பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட நாடு இந்தியா. அந்தவகையில் தமிழர்களின் பண்பாட்டை காக்கும் வகையில் ஜல்லிக்கட்டிற்கு தடை நேராத வகையில் சட்டத்திருத்ததை 9வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றார். ஜல்லிக்கட்டு மீதான தடையால் நாட்டு மாடு இனங்களே அழிந்துவிடும் என கூறிய அவர், காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.