திருச்சி: அட்சய திருதியைக்காக நகைக்கடையில் குவியும் மக்கள் கூட்டம்

திருச்சி: அட்சய திருதியைக்காக நகைக்கடையில் குவியும் மக்கள் கூட்டம்
திருச்சி: அட்சய திருதியைக்காக நகைக்கடையில் குவியும் மக்கள் கூட்டம்
Published on

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள நகை கடைகளில் நகை வாங்க மக்கள் கூட்டம் குவிந்து வருகின்றது.

இன்று அட்சய திருதியை தினம் என்பதால் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகமாக உள்ளது. மேலும் இன்றைய தினத்தில் வாங்கும் பொருட்கள் நிலைத்த செல்வமாக இருக்குமென்பது இந்துக்களின் நம்பிக்கை. செல்வம் என்ரு வருகையில், மக்களின் சேமிப்பு திட்டங்களில் பிரதானமாக இருப்பது தங்கம்தான். எனவே அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும் பொழுது ஆண்டு முழுவதும் தங்கம் சேரும் என்பதாலும், வீட்டில் செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கையிலும் மக்கள் இன்று தங்க நகை வாங்குவர். அந்தவகையில் திருச்சியில் உள்ள நகை கடைகளில் அதிக அளவு மக்கள் இன்று குவிந்தனர்.

குறிப்பாக நகைக்கடை சார்பிலும் அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு முன்பதிவு செய்யும் வசதியும், செய்கூலி, சேதாரம் உள்ளிட்டவற்றில் சிறப்பு தள்ளுபடியும், நகை வாங்குபவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும் என பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டதால் மக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் தங்க நகை வாங்க காலை முதலே கடைகளில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளதன் காரணத்தினாலும், இன்று ரம்ஜான் பொது விடுமுறை என்பதாலும் மக்கள் நகை கடையை நோக்கி படையெடுக்கின்றனர்.

நகைக்கடை மேலாளரொருவர் நம்மிடையே பேசுகையில், `எல்லா நாளும் பல்வேறு சலுகைகள் தங்கம் வாங்க வழங்கப்பட்டாலும் அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என மக்கள் நம்புகின்றனர். இதனால் அன்றைய தினம் அதிக அளவில் நகை வாங்க வருகின்றனர். மக்களின் வசதிக்கு ஏற்றார் போல் சிறுசேமிப்பு திட்டம் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்துள்ளோம்’ தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com