சூறாவளியில் விழுந்த சாலையோர புளிய மரம் : இருவர் பலி

சூறாவளியில் விழுந்த சாலையோர புளிய மரம் : இருவர் பலி
சூறாவளியில் விழுந்த சாலையோர புளிய மரம் : இருவர் பலி
Published on

மணப்பாறை அருகே சாலையோர புளியமரம் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கம்பளியம்பட்டியை சேர்ந்த ராஜூ ஓட்டுநராக இருந்தார். கனவாய்பட்டியை சேர்ந்த கூலி
தொழிலாளி மனோகர். இவர்கள் இருவரும் துவரங்குறிச்சியிலிருந்து இருசக்கர வாகனத்தில் புத்தாநத்தம் சென்றுகொண்டிருந்தனர்.
துவரங்குறிச்சி – மணப்பாறை சாலையில் மெய்யம்பட்டி பகுதிக்கு வந்தபோது, சாலையோர புளிமரம் ஒன்று சூறாவளி காற்று
அடித்ததில் வேரோடு சாய்ந்து அவர்கள் வந்த இருசக்கர வாகனம் மீது விழுந்தது. 

இதில் ராஜூ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன் படுகாயமடைந்த மனோகர் மணப்பாறை அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த புத்தாநத்தம்
காவல்துறையினர் இருவரின் உடலையும் உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு அனுப்பி வைத்தனர். மரம் விழுந்ததில்
துவரங்குறிச்சி – மணப்பாறை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com