திருச்சி: மதுரகாளியம்மன் கோவில் தேர் திருவிழா: ஆயிரம் பானையில் பொங்கலிட்ட பக்தர்கள்

திருச்சி: மதுரகாளியம்மன் கோவில் தேர் திருவிழா: ஆயிரம் பானையில் பொங்கலிட்ட பக்தர்கள்
திருச்சி: மதுரகாளியம்மன் கோவில் தேர் திருவிழா: ஆயிரம் பானையில் பொங்கலிட்ட பக்தர்கள்
Published on

தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயிரம் பானையில் பொங்கலிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரகாளியம்மன் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் பாக்கு படைத்தல் விழா நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 8ம் தேதி முதல் பூத்தட்டு சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், மார்ச் 22 ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று கோவில் கதவைடைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் ஆயிரம் பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். இந்த விழாவின்போது முசிரி காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மணி தலைமையிலான தொட்டியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com