தமிழ்நாடு
’சிகரெட் வினியோகிஸ்தர்’ கேள்வியால் நிர்வாகிகள் ஆவேசம்.. நிதானமாக விளக்கம் கொடுத்த துரை வைகோ!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனும் அக்கட்சியின் முதன்மை செயலராம துரை வைகோ திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
மக்களவை தேர்தல் நடைப்பெற இருக்கும் நேரத்தில், கட்சிகள் அனைத்தும் தங்களது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. இந்நிலையில் மதிமுக திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனான துரை வைகோ திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், செய்தியாளர்கள் அவரிடம், ஒரு சிகரெட் கம்பெனி நடத்திய ஒருவர் நாட்டின் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துரை வைகோ,
“நான் ITC சிகரெட் கம்பெனியை 2000லிருந்து 2016 வரை நடத்தி வந்தேன். மதுவை எதிர்த்து போராடும் வைக்கோவின் மகன் சிகரெட் கம்பெணியை நடத்துவதா என்ற கேள்வி எழுந்ததும், நான் தென்காசியில் நடத்தின அந்த தொழிலை விட்டுவிட்டேன்.அதை விட்டு ஏழு வருடங்கள் ஆகிறது. இந்த அரசியலால் நாங்கள் இழந்தது அதிகம்” என்று விளக்கம் கொடுத்தார்.