பொது சுகாதாரத்துறை நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சியில் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது.
விளையாட்டு போட்டியினை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். டி சர்ட், ஜீன்ஸ் பேண்ட், அணிந்து வந்து விழாவிற்கு அவர் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
பின்னர் பேட்டை பிடித்து விளையாட ஆரம்பித்த ஆட்சியர், இளைஞர்கள் வீசிய பந்தை, சிக்ஸ்சர், ஃபோர் என பறக்கவிட்டார். இதனை அங்கு கூடி நின்ற விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் கைத்தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து அவர் சந்தித்த 60 பால்களையும் சிக்சர், ஃபோர்களாக மாவட்ட ஆட்சியர் அடித்து விளாசினார். ஏற்கனவே திருச்சியில் நடைபெற்ற புத்தக விழாவில் விசில் அடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.