திருச்சி வங்கியில் ரூ. 16 லட்சம் கொள்ளையடித்தவர் கைது 

திருச்சி வங்கியில் ரூ. 16 லட்சம் கொள்ளையடித்தவர் கைது 
திருச்சி வங்கியில் ரூ. 16 லட்சம் கொள்ளையடித்தவர் கைது 
Published on

திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் ரூ. 16 லட்சம் கொள்ளையடித்தவர் பெரம்பலூரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட திருச்சி பாலக்கரையை சேர்ந்த நபரிடம் இருந்து கொள்ளை பணத்தில் 15.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருச்சி ATM ஒன்றில் பணம் வைப்பதற்கு எடுத்துச்செல்லப்பட்ட 16 லட்ச ரூபாய் பணத்தை மர்மநபர் ஒருவர்  கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி இருந்தது. போலீசார் கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு ஒருவர் பெரம்பலூர் பாலக்கரையில் ஆட்டோ சவாரிபிடித்து தமக்கு லாட்ஜில் அறை எடுத்து தருமாறு கேட்டுள்ளார். வந்தவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.ஆட்டோ ஓட்டுனர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் அந்த நபரை இறக்கிவிட்டுள்ளார். அப்போது லாட்ஜில் உள்ளவர்கள் அடையாள அட்டை கேட்டுள்ளனர். அதற்கு அந்த நபர் தம்மிடம் அடையாள அட்டை எதுவும் இல்லை என்றும் பணம் எவ்வளவு வேண்டுமென்றாலும் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதனால்சந்தேகமடைந்த ஆட்டோ  ஓட்டுனர் முருகையா மர்ம ஆசாமி கொண்டு வந்த பேக்கை சோதணை செய்ததில் அதில் கட்டுகட்டாக பணம் இருந்ததை பார்த்து  அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த நபரை ஆட்டோவில் அழைத்துச் சென்ற முருகையா பெரம்பலூர் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவர்  திருச்சியை சேர்ந்த ஸ்டீபன் என்பதும் அவர் வைத்திருந்த பணம் ATM மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட 16 லட்சரூபாய் பணம் என்பதும் தெரியவந்தது.ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக வங்கியில் செக் கொடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள் பணம் பெற்றனர். வங்கியில் தனியார் ஊழியர்கள் கவனத்தை திசை திருப்பி ரூ. 16 லட்சத்தை கொள்ளையடித்துள்ளார் ஸ்டீபன். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com