திருச்சியில் தனியார் ஆட்டோ நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க, நாளை முதல் மீட்டர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
திருச்சி மாநகரில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தினசரி இயக்கப்படுகின்றன. கடந்த 2014 ம் ஆண்டு, அரசு சார்பில் ஒவ்வொரு ஆட்டோவிலும் மீட்டர் பொறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கட்டணம் மிகவும் குறைவாக இருந்ததாக கூறி போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள், மீட்டர் கட்டண முறையை கைவிட்டனர். ஆனால் தற்போது திருச்சியில் தனியார் நிறுவனங்களின் ஆட்டோக்கள் பெருகிவருகின்றன. இதையடுத்து, CITU தொழிற்சங்கத்தினை சேர்ந்த 2000 ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் கட்டண முறையை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.
மேலும், அரசு நடவடிக்கை எடுத்து வரைமுறைப்படுத்தப்பட்ட கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.