திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக திருவெறும்பூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வருவாய்துறையினர் அளவை பணியில் ஈடுபட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டத்தில், திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு உத்தேசித்து அதற்கான பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. இதில் திருவெறும்பூர் வட்டத்தின் கிழக்குப் பகுதியான ஜேகே நகர் மற்றும் பாரதி நகர் பகுதிகளில் 46 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஆனால் இந்த பகுதியில் 40 வீடுகள் முறையான அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளன. தற்போது விமான நிலைய விரிவாக்க பணிக்காக, தங்கள் வருமானம் முழுவதையும் செலவழித்து கட்டிய வீட்டை இடிக்க வேண்டும் என்றால் நாங்கள் வேறு எங்கு போவோம் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, நிலம் கையகப்படுத்தப்படும் என அரசு முன்னரே தெரிவித்திருந்ததாக கூறினர். மேலும் வீடுகளின் அளவை பொறுத்து இழப்பீடு வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர்.