10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவழி சாலையாக மாறிய அண்ணாசாலை  

10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவழி சாலையாக மாறிய அண்ணாசாலை  
10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவழி சாலையாக மாறிய அண்ணாசாலை  
Published on

சென்னை அண்ணாசாலையை இருவழிப்பாதையாக மாற்றும் வகையிலான சோதனை ஓட்டத்திற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பணிக்காக சென்னை அண்ணாசாலை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இன்றும், நாளையும் சோதனை ஓட்டம் நடைபெறும் என சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக போக்குவரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ''அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த நிலையில் ஜி.பி சாலை முதல் ஒயிட்ஸ் சாலை வரை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் சோதனை ஓட்டமாக இன்றும், நாளையும் அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதற்காக அண்ணாசாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து வெல்லிங்டன் சந்திப்பு வரை இருவழிச்சாலையாக மாற்றப்படுகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகன போக்குவரத்தில் மாற்றம் ஏதுமில்லை. அண்ணா சிலையில் இருந்து ஜெமினி அல்லது தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள் LIC  வழியாக அண்ணா மேம்பாலத்துக்கு செல்லலாம். அண்ணா சிலையில் இருந்து பின்னி சாலைக்குச் செல்வோர் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் செல்லலாம். அதே போல் பின்னி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பின் வலதுபுறம் திரும்பி அண்ணா மேம்பாலம் செல்லலாம். அதன்வழியே பட்டுலாஸ் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலைக்கு செல்லலாம்.

வெல்லிங்டன் சந்திப்பில் இருந்து மணிகூண்டு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதுடன் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com