முன்கூட்டியே தொடங்கிய வேலைநிறுத்தம்... பயணிகள் அவதி

முன்கூட்டியே தொடங்கிய வேலைநிறுத்தம்... பயணிகள் அவதி
முன்கூட்டியே தொடங்கிய வேலைநிறுத்தம்... பயணிகள் அவதி
Published on

தமிழக அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் திட்டமிட்டதற்கு முன்னதாகவே தொடங்கியுள்ளது.

அரசு பேருந்து தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், 7 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன், சென்னையில் ஐந்தாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிலுவைத் தொகையில், 1,250 கோடி ரூபாயை வழங்க அரசு தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதை ஏற்க மறுத்த தொழிற்சங்கங்கள் திட்டமிட்டப்படி நாளை முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அறிந்த போக்குவரத்து தொழிலாளர்கள்‌, திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே, இன்று மாலை முதலே பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி, தஞ்சை, வேலூர், நீலகிரி உள்ளிட்ட பல பகுதிகளில் பேருந்துகள் இயங்காததால், மக்கள் அவதிப்பட்டனர். சென்னை கோயம்பேடு, கடலூர் போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. போராட்டம் தொடங்கியதால், தொழிற்சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் விஜயபாஸ்கர் கடைசிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.‌ அதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com