பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
Published on

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது எனவும், விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

எனவே ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி வாகனங்களில் முன்னும் பின்னும் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும், பள்ளி திறந்தவுடன் முழுமையாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேருந்து பணிமனைகளில் பணிகளில் இருக்கும் பணியாளர்கள் அதிகளவில் ஆப்செண்ட்டாக இருப்பதால்தான் பேருந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆய்விற்கு பின் பணியாளர்கள் மீண்டும் பணிக்கு வர தொடங்கியுள்ளனர். பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், gpay, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com