5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
போக்குவரத்துத் துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்று முடிந்தபிறகு, அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பதிலுரை ஆற்றுகையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், வரும் 12ஆம் தேதி போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஏற்கனவே மூன்று வயது குழந்தைகளுக்கு அரசு பேருந்தில் கட்டணம் வசூலிக்கப்படாதிருந்த நிலையில், இனி ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்தில் கட்டணம் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணிப்பதைத் தடுப்பதற்கு அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் புற்றுநோயாளிகள் பயணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை இணையதளம் வாயிலாக வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F1421705378281464%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>