ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் தருவதாக வெளியான செய்தி குறித்து போக்குவரத்து ஆணையர் விளக்கமளித்துள்ளார்.
ஓட்டுநர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்கப்படும் என சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியது. இந்நிலையில் போக்குவரத்து துறை இந்த அறிவிப்பை வெளியிடவில்லை என போக்குவரத்து ஆணையர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் என்ற பெயரில் பரவும் விளம்பரம் தவறானது என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும், தவறான தகவல் பரப்புவோர்மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், ”விஏஓ அலுவலகத்தில் ஆவணங்களை அளித்தால் வங்கிக்கணக்கில் ரூ.1000 நிவாரணம் என்பது பொய் செய்தி; தவறான தகவல் பரப்புவோர்மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.