திருத்தணி முருகன் கோவிலுக்குத் தினந்தோறும் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை எனப் பல மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்தநிலையில், தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கும் பக்தர்களை, வழி மறித்து 10க்கு மேற்பட்ட திருநங்கைகள் அவர்களைக் கட்டாயப்படுத்தி பணம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் "பணம் இல்லை" என்று தெரிவிக்கும் பக்தர்களிடம், ஆன்லைன் பரிவர்த்தனையில் பணம் அனுப்புமாறு கேட்டு அடாவடியில் ஈடுபட்டு வருவதாகப் பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். உடனடியாக கோவில் நிர்வாகம் தலையிட்டு பணம் பறிக்கும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.