சமூக புறக்கணிப்பை உத்வேகமாக எடுத்துக் கொண்ட திருநங்கை - சொந்தமாக உணவகம் நடத்தி அசத்தல்

சமூக புறக்கணிப்பை உத்வேகமாக எடுத்துக் கொண்ட திருநங்கை - சொந்தமாக உணவகம் நடத்தி அசத்தல்
சமூக புறக்கணிப்பை உத்வேகமாக எடுத்துக் கொண்ட திருநங்கை - சொந்தமாக உணவகம் நடத்தி அசத்தல்
Published on

மதுரையில் தனி ஆளாக உணவகம் நடத்தி வரும் திருநங்கை, ஆதரவற்றோர், திருநங்கைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு தனது உணவகத்தில் பணிவாய்ப்பு வழங்கி அசத்தி வருகிறார்.

மதுரை ஆனையூர் அருகேயுள்ள மல்லிகை நகரை சேர்ந்தவர் திருநங்கை நிலா, இட்லி அவிப்பதில் தொடங்கி, உணவகத்தில் சுற்றிச்சுழன்று வேலை பார்த்து வருகிறார். பல திருநங்கைகளைப் போலவே இவரும் கடைகளுக்குச்சென்று யாசகம் வாங்கியவர்தான். ஆனால் கொரோனா காலத்தில் பட்ட வேதனைகள், இவரை சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற துண்டியதன்பேரில் சொந்த முதலீட்டில் அசைவ உணவகத்தை தொடங்கி நடத்திவருகிறார்.

சமூக புறக்கணிப்பை தனக்கான உத்வேகமாக எடுத்துக்கொண்ட நிலா, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகத்தை நடத்திவருகிறார். தனது உணவகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய இளைஞர்களுக்கும், திருநங்கைகளுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் வேலை தந்துள்ளார். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போல திருநங்கைகளுக்கும் குழுக்கள் ஏற்படுத்தி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் நிலா, இதன்மூலம் தன்னைப்போன்ற திருநங்கைகளும் வாழ்வில் முன்னேற வழிபிறக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com