திருப்பூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹெல்மட், சீட் பெல்ட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநங்கைகள்.
திருப்பூர் ரோட்டரி மெட்டல் டவுன் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. திருப்பூர் புஷ்பா தியேட்டர் சாலை முன் நடைபெற்ற இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல் முதலாக திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட திருநங்கைகள், வாகன ஓட்டிகள் இரு சக்கர வாகனத்தை ஹெல்மட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும், அதே போல் கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிந்து காரை ஓட்ட வேண்டும், என அறிவுரை வழங்கினர். மேலும் ஹெல்மட் அணிந்தும் - சீட் பெல்ட் அணிந்தும் வாகனம் ஓட்ட வேண்டும் என திருநங்கைகள் தத்ரூபமாக நடித்தும் காட்டினர்.
இந்த நிகழ்வில் மாநகர காவல்ஆணையர் மனோகரன், மாநகர துணை காவல்ஆணையர் உமா, ரோட்டரி கிளப் நிர்வாகிகள், திருநங்கைகள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனிடையே விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்ட திருநங்கைகள், பாதுகாப்பான பயணம் குறித்து நடனம் மற்றும் பாடல் மூலம் நடித்து காட்டியது வாகன ஓட்டிகளை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது குறிபிடத்தக்கது.