திருச்சியிலிருந்து மயிலாடுதுரை ரயில்வே தடத்திற்கு மாறியபோது தண்டவாளத்தை விட்டு ரயில் சக்கரம் விலகியது. கோவை - மயிலாடுதுறை ஜன சதாப்தி விரைவு ரயில் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. ஓட்டுநர் சாமார்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
மதியம் 1.40 க்கு திருச்சியில் இருந்து வந்த ரயில் 4 வது நடைமேடைக்கு மாறியபோது ரயில் சக்கரம் தடம் புரண்டுள்ளது. தகவலறிந்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மல்லியம் - மயிலாடுதுறை ரயில்பாதையில் தற்போது ரயில் நின்று கொண்டிருக்கிறது. இந்த ரயிலில் 500 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
தடம்புரண்டதற்கு காரணம் என்னவென்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் சிக்னல் விழுந்தும் ஓட்டுநர் ரயிலின் வேகத்தை குறைக்காததே இந்த விபத்திற்கு காரணம் என அங்கிருந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், ரயில் சக்கரம் தடம் புரண்டதால் திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வரும் ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.