செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்
தென்காசி மாவட்டம் கம்பிளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். அவருடன் அவரது தாயும் தந்தையும் வசித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில், உடல் நலம் குன்றியதால் முருகேசன் மனநலம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், அவரது மனைவி அவரை விட்டுச் சென்றதாகவும் தெரிகிறது.
விரக்தியிலிருந்த முருகேசனின் தாய், தோட்டத்தில் மகனுக்கும், கணவருக்கும் வாழைப்பழத்தில் விஷம் வைத்து கொடுத்துள்ளார். அவர்களும் அதை அறியாமல் சாப்பிட்டுள்ளனர். இதனால் மயங்கி விழுந்த 3 பேரும் இறந்தனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.