சேலம்: தேர்தல் பணியில் இருந்த பெண் துணை வட்டாட்சியர் விபரீத முடிவு – காரணம் என்ன?

மேட்டூரில் தேர்தல் துணை வட்டாட்சியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Narmatha
Narmathapt desk
Published on

செய்தியாளர்: பாலகிருஷ்ணன்

மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தவர் நர்மதா (37). இவரது கணவர் மணிகண்ட சபரி (38) மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு தேர்தல் துணை வட்டாட்சியர் நர்மதா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

Tragedy
Tragedypt desk

இதுகுறித்து அவரது கணவர் மணிகண்ட சபரி மேட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில் தனது மனைவிக்கு மன அழுத்தம் இருந்ததாகவும் இதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Narmatha
சென்னையை அதிர வைத்த கொலை, தற்கொலை சம்பவம்.. தன்பாலின இளைஞர்களுக்கு இடையே நடந்தது என்ன?

இச்சம்பவம் தொடர்பாக மேட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தேர்தல் நேரத்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Narmatha
‘தற்கொலை தீர்வல்ல மாணவச் செல்வங்களே...’ - நீதிபதி கற்பக விநாயகம் சொன்ன குட்டி கதை!

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com