ஈரோடு அருகே மின்கம்பத்தில் சாய்ந்தபடி கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த இளைஞர் விஜயகுமார், மொடக்குறிச்சியில் தங்கி தறிப்பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களாக அங்கு பணிபுரிந்து வரும் இவர், நள்ளிரவு அப்பகுதியில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது சாய்ந்த படி செல்போன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் பேசியபடியே மின்கம்பத்தில் இருந்து எர்த்-திற்கு செல்லும் கம்பியை செல்வராஜ் தொட்டுள்ளார். அப்போது எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கியதில் அவரின் கைகள் மற்றும் மார்பு பகுதியின் தோல்கள் எரிந்தன.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினரின் விஜயகுமாரை மீட்டு ஈரோடு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது 50 சதவீத தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் விஜயகுமார்.
செல்போன் பயண்படுத்துவோர் நடந்துகொண்டேவோ, இதுபோன்ற ஆபத்தான இடங்களில் சாய்ந்தபடியோ, வண்டி ஓட்டிக்கொண்டோ அல்லது வேறு எந்த ஆபத்தான வகையிலும் ஃபோன் பயண்படுத்த வேண்டாம் என மருத்துவர்களும் நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.