தரமற்ற மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கிய அமைச்சர்கள் மீது வழக்குப்பதியக் கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
கர்நாடக அரசால் நிராகரிக்கப்பட்ட மிதிவண்டிகளை, அந்த மாநில அரசின் சின்னத்தைக்கூட நீக்காமல், தமிழக அரசின் விலையில்லா திட்டத்தில் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதன் அடிப்படையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி புகார் அளித்திருந்தார்.
அதில், தரமற்றது என நிராகரிக்கப்பட்ட மிதிவண்டிகளை மாணவர்களுக்கு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செங்கோட்டையன் ஆகியோர் வழங்கியதாக குறிப்பிட்டிருந்தார். எனவே, அவர்கள் மீது 24 மணி நேரத்திற்குள் வழக்கு பதியாவிட்டால் நீதிமன்றத்தை நாடவப்போதாகவும் டிராபிக் ராமசாமி கூறியிருந்தார்.
இந்நிலையில் பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி இன்று தாக்கல் செய்தார். அந்த மனு தரமற்ற மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கிய அமைச்சர்கள் மீது வழக்குப்பதிய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.