நாளை பிரமாண்ட சாகச நிகழ்ச்சி; ‘Fire Mode’ல் விமானப்படை படையினர்! மெரினா கடற்கரையில் டிராபிக் மாற்றம்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள விமானப்படை சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
மெரினா கடற்கரை
மெரினா கடற்கரைமுகநூல்
Published on

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள விமானப்படை சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

மெரினா காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள், வாகனத்தை நிறுத்துவதற்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்ல வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் வாகன ஓட்டிகள் சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் சாலை அண்ணாசாலையைப் பயன்டுத்த போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மெரினா கடற்கரை
இருளர் சமூக பெண்ணுக்கு அநீதி: ராமதாஸ் குற்றச்சாட்டு

அண்ணா சிலையிலிருந்து செல்லும் மாநகர பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேனி, ரத்னா கஃபே சந்திப்பு, ஜஸ் ஹவுஸ் சந்திப்பு, நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, மத்தைவெளி, மயிலாப்பூர் வழியாக, தங்கள் இலக்கை அடையாளம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கிரீன்வேஸில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி, ஆர்.ஏ. புரம் 2ஆவது பிரதான சாலை, டிடிகே சாலை, ஆர்.கே.சாலை, அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com