வம்புக்கு இழுக்க வேண்டாம்: டிஆர் பாலு

வம்புக்கு இழுக்க வேண்டாம்: டிஆர் பாலு
வம்புக்கு இழுக்க வேண்டாம்: டிஆர் பாலு
Published on

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற தாரக மந்திரத்தை ‌மனதில் தாங்கி பணியாற்றுகிற தன்னை, பொன்.ராதாகிருஷ்ணன் வம்புக்கு இழுக்க வேண்டாம் என டி.ஆர்.பாலு கூறியிருக்கிறார்.

தேசிய நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தியை முதன்மைப்படுத்தும் விவகாரத்தில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய குற்றச்சாட்டுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அரசாணையை, சரியாகப் படித்துப் பார்க்காமலேயே பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2004ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி, மத்திய அரசைக் கண்டித்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், நெடுஞ்சாலைகளில், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், இந்தியில், பெயர்களை எழுதியுள்ளனர் என ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக குறிப்பாணை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், எல்லை மைல்கற்களிலும், அந்தந்த மாநில மொழி கட்டாயம் இடம்பெறுவதோடு, அவற்றையே முதன்மைபடுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், மாநில மொழிகளைத் தொடர்ந்து, ஆங்கிலமும், அதைத் தொடர்ந்து, ஒன்றாவது, 3ஆவது, 7ஆவது மைல்கற்களில் இந்தியும் இடம்பெறலாம் என்றும் குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

மைல்கற்களில், தமிழ் மொழியில், ஊர்ப் பெயர்கள் கட்டாயம் இடம்பெறுவதோடு, அதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது என டி.ஆர்.பாலு கூறியுள்ளர். திமுக இடம்பெற்றிருந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புரிந்துகொள்வார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com