“அழுத்தம் கொடுக்கப்பட்டு இருக்கலாம்” - தேர்தல் ஆணையர் பதவி விலகல் குறித்து டி.ஆர்.பாலு கருத்து

“தேர்தல் ஆணையருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அதனாலேயே அவர் பதவி விலகி இருப்பார்” என்று திமுக நாடாளுமன்ற தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
TR. Balu
TR. Balupt desk
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேலின் தொகுதி மேம்பாட்டு நிலையிலிருந்து 71 லட்சம் ரூபாய், சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து கணிசமான தொகை ஆகியவை போடப்பட்டு பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றின் துவக்க விழா மற்றும் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

TR.Balu
TR.Balupt desk

இதில் கலந்து கொண்ட திமுக நாடாளுமன்றக் குழு தலைவரும், பொருளாளருமான டி.ஆர்.பாலு அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டி.ஆர்.பாலு, “அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம், அவருக்கு பிடிக்காத ஒன்றை செய்திருப்பார்கள். அதனால் அவர் பதவி விலகி இருக்கலாம்” என்று கூறினார்.

TR. Balu
தேர்தல் பத்திர விவகாரம்: SBI வங்கிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீது இன்று விசாரணை

தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய தலைவரும், நடிகையுமான குஷ்பூ தன் செய்தியாளர் சந்திப்பில் கூறிய கருத்தான ‘காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்யாததை கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் செய்திருக்கிறோம்’ என்பதை சுட்டிக்காட்டி டி.ஆர்.பாலுவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இதற்கெல்லாம் பதில் கூறலாமா?” என்று அந்த கேள்வியை புறக்கணித்துவிட்டு சிரித்தபடியே சென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com