குன்னூர் அருகே சேம்புக்கரை பழங்குடியின கிராமத்தில் உள்ள 21 வீடுகளுக்கு 50 ஆண்டுகளுக்குப் பின் புதிய மின் இணைப்பை வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்ட சேம்புக்கரை பழங்குடியின கிராமத்தில் குரும்பர் இனத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் பல வீடுகளில் மின் இணைப்பு இல்லாமல் பங்குடியின மக்கள் சிரமப்படுவதாக தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு பலமுறை எடுத்து செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வந்த நிலையில், வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் பழங்குடி கிராமத்தில் உள்ள 21 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,
இதையடுத்து 50 ஆண்டுகாலமாக மின் இணைப்பு இல்லாமல் இருந்த பழங்குடியின மக்கள் வெளிச்சம் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர்.