கோடை விடுமுறை நிறைவு பெறுவதையொட்டி பவானிசாகர் அணைப் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கோடை விடுமுறை காலம் முடியும் தருவாயில் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் வரத்து சுற்றுலா தலங்களில் குறைவாகவே காணப்படும்.ஆனால் சுற்றுலாப் பயணிகளை கவர புதிய உத்திகளை கையாண்டு சுற்றுலா பார்வையாளர்களின் வருகையை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைப்பூங்காவுக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை காலம் முடிவடைவதால் சுற்றுலா பயணிகள் வருகை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3டி சினிமா, பலூன் நீச்சல் குளம், ராட்டினம் போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அணையில் உள்ள டைனோசர் சிலை, ஒட்டக சிவிங்கி, மான், யானை சிலைகள் சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் 'புதிய அமைப்புகள் கண்ணை கவருகின்றது என்றும் பவானிசாகர் அணைப்பூங்கா மினி ஊட்டி போன்று உள்ளது' என்றும் தெரிவித்துள்ளனர்.