ஒகேனக்கல் பரிசல் பயணத்துக்கு கூடுதல் கட்டண வசூல்: சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு

ஒகேனக்கல் பரிசல் பயணத்துக்கு கூடுதல் கட்டண வசூல்: சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு
ஒகேனக்கல் பரிசல் பயணத்துக்கு கூடுதல் கட்டண வசூல்: சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு
Published on

ஒகேனக்கல்லில், பரிசல் பயணத்துக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் ஆயில் மசாஜ் செய்து, அருவிகளில் குளித்தும், அருவியின் அழகை கண்டு ரசிக்க பரிசல் பயணம் செய்தும் பொழுதை கழிக்கின்றனர். இந்த சுற்றுலாவை நம்பி மூவாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

ஒகேனக்கல்லில் பரிசல் பயணத்திற்கு அரசின் கட்டணமாக 750 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பரிசல் ஓட்டுபவர்களுக்கு 600 ரூபாய் வழங்கப்படுகிறது. ஐந்தருவி, மணல்மேடு, மாமரத்து கடவு மற்றும் தண்ணீர் தேக்கமடைந்துள்ள காலங்களில் சின்னாறு பரிசல் துறையிலிருந்து கூத்துக்கல், மெயினருவி, மணல் மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்துள்ள நிலையில் தற்போது ஒகேனக்கல் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பணிகள் ஒகேனக்கல்லுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பரிசல் பயணத்துக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி டம் கேட்டபோது, சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பரிசல் ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சுற்றுலாப் பயணிகள் தங்கள் புகார்களை அரசின் தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com