இன்று காலை தனுஷ்கோடிக்கு சுற்றுலா சென்ற ஒரு வேன், அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்றபோது மற்றொரு வேன் மீது மோதி இந்த வேன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒருவார காலமாக இராமேஸ்வரத்திற்கு அங்கு நடைபெறும் பஜனை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெல்லி, மும்பை, ராஜஸ்தான், கல்கத்தா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தனுஷ்கோடிக்கு சுற்றுலா சென்ற பக்தர்களின் வேன், அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது மற்றொரு வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 40 பேர் இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கையில், “எதிரே வந்த வாகனத்தில் வந்தவர் கவனிக்காமல் நேரே வந்த வாகனத்தின் மீது மோதியுள்ளது முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது” என்றுள்ளனர்.
உயிரழந்தவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த 45 மற்றும் 52 வயதானவர்கள் என்று தெரியவந்துள்ளது. வடமாநில யாத்ரிகள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.