உதகமண்டலம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்த 31 பேர் உதகமண்டலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பிக்கொண்டு இருந்தனர். கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை என்னுமிடத்தில் கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, அங்கிருந்து கீழிருக்கும் சாலையில் விழுந்தது. இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இரண்டு பேர் இறந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 16 பேர் மேல் சிகிச்சைக்காக மைசூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் உதகமண்டலம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.