அதிகபட்சம் 8 சதவிகிதம் வளர்ச்சி பெரும் தமிழகத்தில், 2030 ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவது எப்படி சாத்தியம் ? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ம.க. சார்பில் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இதனை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 22 ஆண்டுகளாக நிழல் நிதிநிலை அறிக்கையை நாங்கள் வெளியிட்டு வருகிறோம். தவிர கடந்த 17 ஆண்டுகளாக நிழல் வேளாண் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றோம். இது ஆக்கப்பூர்வ ஆவணமாக அரசு பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் மொத்த கடன் சுமை 14 லட்சத்து 50 ஆயிரம் கோடி. இதற்கு வட்டி மட்டும் மாதம் 1 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் கட்டவேண்டும்.
ஆனால், எங்கள் நிழல்நிதிநிலை அறிக்கையின் படி கூடுதல் வருவாய் 2,00,000 கோடி ரூபாய்க்கு வரியில்லாத வருவாயினை எங்களால் ஈட்டமுடியும் என்று எங்களின் ஆவணத்தில் நாங்கள் வெளியிட்டு உள்ளோம்.” என்று கூறியிருக்கிறார்.