ஓமன் நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா பாதிப்பு. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை.
போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதால் கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை என தமிழக அரசு உறுதி. 1080 பேரின் உடல்நிலையை கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை தகவல்.
கொரோனா குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என பொது மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை மேம்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதி. மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்குவது பற்றி பரிசீலிக்கப்படுவதாகவும் பேச்சு.
யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரை கைது செய்தது அமலாக்கத்துறை. 600 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அதிரடி.
மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம். மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி.
முகக் கவசம் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதித்தது ஃபேஸ்புக் நிறுவனம். கொரோனா வைரஸ் பற்றிய மக்களின் அச்சத்தை பயன்படுத்தி வணிகர்கள் லாபமடைவதை தடுக்க நடவடிக்கை.
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாட்டம். மனித குலத்தை செம்மையடைய செய்யும் பெண்களை போற்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு.
மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா. மகளிர் தினத்தன்று வாகை சூடுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை அணி. 2வது அரையிறுதியில் கோவாவிடம் தோற்றாலும் கோல் வித்தியாச அடிப்படையில் முன்னேற்றம்.