டாப் 7 அரசியல் களம்: மோடி, ராகுல் வருகை முதல் விசிக தேர்தல் அறிக்கை வரை!

டாப் 7 அரசியல் களம்: மோடி, ராகுல் வருகை முதல் விசிக தேர்தல் அறிக்கை வரை!

டாப் 7 அரசியல் களம்: மோடி, ராகுல் வருகை முதல் விசிக தேர்தல் அறிக்கை வரை!
Published on

தமிழக தேர்தல் களத்தில் இன்று நடந்த 7 முக்கியமான நிகழ்வுகளை இங்கு பார்க்கலாம்

* ஊழல் மற்றும் வாரிசு அரசியல் இல்லாத ஒரு கட்சியை திமுக, காங்கிரஸால் உருவாக்க முடியுமா என சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார் விரிவாக வாசிக்க 'வாரிசு அரசியல் அல்லாத கட்சியை திமுகஇ காங்.இ உருவாக்க முடியுமா?' - குஷ்பு பேட்டி

* கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை மறுநாள் பரப்புரை மேற்கொள்கிறார். கட்சி பதவியை ஏற்ற பிறகு, அவர் முதன்முறையாக தமிழகத்தில் பரப்புரை செய்கிறார். விரிவாக வாசிக்க கன்னியாகுமரியில் பிரியங்கா காந்தி நாளை மறுநாள் பரப்புரை

திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். விரிவாக வாசிக்க திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்... விரிவாக வாசிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

கருத்துக்கணிப்புகள் நம் வெற்றியை உறுதி செய்தாலும் அதீத எண்ணம் துளியும் வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் விரிவாக வாசிக்க ஒவ்வொரு வாக்கும் முக்கியம்; அலட்சியமின்றி களப்பணியாற்றுவோம்: மு.க.ஸ்டாலின்

அமைச்சர் பாண்டியராஜனை தொடர்ந்து அவதூறாக பேசிவரும் ஆவடி தொகுதி திமுக வேட்பாளர் நாசரின் வேட்புமனுவை நிராகரிக்கக்கோரி அதிமுக சார்பில் வழக்கறிஞர்கள் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர் விரிவாக வாசிக்க 'அமைச்சரை அவதூறாக பேசிய திமுக வேட்பாளர் மனுவை நிராகரியுங்கள்'- அதிமுக நிர்வாகிகள் புகார் 

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகம் வருகை தர உள்ளனர் விரிவாக வாசிக்க பரப்புரைக்காக தமிழகம் வருகின்றனர் பிரதமர் மோடிஇ ராகுல் காந்தி!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com