டாப் 12 தேர்தல் செய்திகள்: இபிஎஸ்-ஓபிஎஸ் கருத்து மோதல் முதல் திமுகவிற்கு கருணாஸ் ஆதரவு வரை

டாப் 12 தேர்தல் செய்திகள்: இபிஎஸ்-ஓபிஎஸ் கருத்து மோதல் முதல் திமுகவிற்கு கருணாஸ் ஆதரவு வரை
டாப் 12 தேர்தல் செய்திகள்: இபிஎஸ்-ஓபிஎஸ் கருத்து மோதல் முதல் திமுகவிற்கு கருணாஸ் ஆதரவு வரை
Published on

* 'உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடங்குகிறது. நாங்கள் அதர்மத்தையும் எதிர்க்கிறோம். துரோகத்தையும் எதிர்க்கிறோம்' என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். விரிவாக வாசிக்க > "வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்

* அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவாக வாசிக்க > அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?

* முக்குலத்தோர் புலிப்படை கட்சி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு

* கருணாஸை தொடர்ந்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > கருணாஸை அடுத்து தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு

* திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று  கையெழுத்தாகியுள்ளது. விரிவாக வாசிக்க > மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; கையெழுத்தானது ஒப்பந்தம்!

* தமிழக சட்டப்பேரவையில் ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் நுழைந்தால் கூட அது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். விரிவாக வாசிக்க > ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட சட்டப்பேரவையில் நுழைந்துவிடக் கூடாது: மார்க்சிஸ்ட்

* பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் தமிழக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > ஜே.பி.நட்டாவின் தமிழக நிகழ்ச்சிகள் ரத்து!

* திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கொரோனா விதிமுறைகள்  மீறப்பட்டதாகக் கூறி  6 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விரிவாக வாசிக்க > திமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் விதிமீறல் - 6 காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு

* தேர்தல் அறிவிப்புக்கு பின் 'விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் திருச்சியில் திமுகவின் மிகப்பெரிய முதல் பரப்புரை பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை அவர் வெளியிட்டார். விரிவாக வாசிக்க > "மு.க.ஸ்டாலின் ஆகிய நான்..." - திருச்சியில் 7 உறுதிமொழிகளை வெளியிட்டு பேச்சு!

கடந்த கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு 60-க்கும் மேல் சீட் கொடுத்தும், சில இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது என்று ப.சிதம்பரம் தெரிவித்தார். விரிவாக வாசிக்க > ”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்

* தமிழக பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், போட்டியிட விரும்பும் இடங்கள் தொடர்பாக அதிமுகவுடன் அக்கட்சி ஆலோசனையில் ஈடுபட்டது. விரிவாக வாசிக்க > பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை

* இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்பதை முதன்முதலாக அறிவித்ததே மக்கள் நீதி மய்யம்தான் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com