அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் விலை அதிகரித்து வரும் நிலையில் திருச்சியில் தக்காளி விலை, சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 80 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
திருச்சி காந்தி சந்தையை பொறுத்தவரை ஒசூர், கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக அளவு தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த வாரம் கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் 30 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட தக்காளியின் விலை சமீப நாட்களில் மழை காரணமாக வரத்து குறைந்து கிடுகிடு என உயர்ந்துள்ளது. சந்தையை விட சில்லறை விற்பனைகள் விலை அதிகம் என்பதால் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் விலை உயர்வால் அவதிப்படுகின்றனர்.
திருச்சி காந்தி சந்தையில் 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 1320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சற்று தரம் குறைவான தக்காளியை 40 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை ஏற்றம் இன்னும் இரண்டு வாரத்துக்கு தொடரும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.