டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு. வன்முறை தொடர்பாக விசாரிக்க இரு சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு.
டெல்லி கலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவிநீக்க குடியரசுத் தலைவரிடம் சோனியா காந்தி முறையீடு. கலவரங்களுக்கு காங்கிரசும், ஆம் ஆத்மியும்தான் காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு.
டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு. வீடுகளை இழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவிப்பு.
உளவுத்துறை அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆத் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூசைன் மீது வழக்குப்பதிவு. குற்றச்சாட்டை அடுத்து கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம். வன்முறையை தடுத்திட வேண்டும் என இந்திய அரசியல் தலைவர்களுக்கு வேண்டுகோள்.
தமிழக குடிநீர் உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம். அனுமதியின்றி செயல்படும் ஆலைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நடவடிக்கை.
இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கரிடம் தீவிர விசாரணை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக பின்னர் அறிவிப்பு.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அதிதீவிர நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.
மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. நியூசிலாந்து எதிரான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி.