Headlines | விஜய்யின் அதிரடி பேச்சு முதல் சைபர் குற்றங்கள் குறித்து பிரதமர் கொடுத்த எச்சரிக்கை வரை!

தவெக முதல் மாநில மாநாட்டில் விஜய்யின் அதிரடி பேச்சு முதல் சைபர் குற்றங்கள் குறித்து பிரதமர் மோடி கொடுத்த எச்சரிக்கை வரை பல முக்கிய செய்திகளை, இன்றைய தலைப்புச் செய்திகள் விவரிக்கிறது.
Headlines
HeadlinesFacebook
Published on
  • பிளவு வாத சக்திகளே தங்கள் கொள்கை எதிரிகள் என தவெக மாநாட்டில் பாஜகவை மறைமுகமாக விமர்சித்த விஜய், மக்கள் விரோத ஆட்சியை நடத்திவிட்டு திராவிட மாடல் என ஏமாற்றுவதாக திமுக மீது விமர்சனம்.

  • தேர்தலில் தவெக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று விஜய் பேச்சு. மேலும், தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்றும் உறுதி.

  • திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என்றும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என்றும் விஜய் உறுதி.

  • ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும், தமிழே ஆட்சி மொழி என்றும் மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை அறிவித்த தவெக.

  • திராவிட மாடலை விமர்சித்ததன் மூலம் விஜய் குழப்பத்தில் இருப்பத்தையே காட்டுகிறது என்றும், காய்த்த மரமே கல்லடி படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து.

  • தமிழக வெற்றிக்கழகத்தின் திராவிடமும், தமிழ் தேசியமும் குழப்பமான கொள்கை முடிவு. தங்கள் கொள்கைகளுடன் ஒத்துப் போகாது என சீமான் பதில்.

  • தவெக மாநாட்டில் தொண்டர்களுக்கு விஜய் கூறிய குட்டிக்கதையில், வரும் பாண்டிய மன்னன் யார் என இணையத்தில் தேடிய நெட்டிசன்கள்.

Headlines
தவெக மாநாடு| சிறுவனை வைத்து விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி.. யார் அந்த பாண்டிய மன்னன்? இணையத்தில் தேடல்!
  • தவெக மாநாடு முடிந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் புறப்பட்டதால் ஸ்தம்பித்த சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை. இந்நிலையில், காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவில்லை என குற்றச்சாட்டு.

  • தீபாவளிக்கு முந்தைய இறுதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம். திருச்சியில் நடைபாதை கடைகளிலும் விறுவிறுப்பான விற்பனை.

  • தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பட்டாசுக் கடையில் வெடி விபத்து ஏற்பட்டதில், உணவகம் மற்றும் 8க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்.

ஹைதராபாத்தில் பட்டாசுக் கடையில் வெடி விபத்து
ஹைதராபாத்தில் பட்டாசுக் கடையில் வெடி விபத்து
  • அதிக பணம் தருவதாக கூறி, பொதுமக்களிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக தனியார் நிறுவனம் மீது புகார் எழுந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டதால் தப்பியோடிய தனியார் நிறுவன ஊழியர்.

  • டிஜிட்டல் கைது உள்ளிட்ட சைபர் குற்றங்கள் அதிகரிப்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எச்சரிக்கை.

  • தாய்லாந்தில் மன்னர் மகா வஜ்ரலங்கனின் பிறந்த நாள் விழா கோலாகலம். பாரம்பரிய முறைப்படி 52 படகுகளுடன் நதியில் உலா வந்த மன்னர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com