சென்னையில் பலத்த காற்றுடன் அதிகாலையில் பெய்த மழையால், கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என்றும், நாளையும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
ஹைதராபாத் நகரில் கொட்டிய கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதி.
93 தொகுதிகளில் அமைதியான முறையில் நடைபெற்ற 3-ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில், சுமார் 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம்.
பாஜக மீண்டும் வென்றால் அரசமைப்பு சாசனம் மாற்றப்படும் என காங்கிரஸ் பொய் பரப்புரை செய்கிறது என மத்தியப் பிரதேச தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை பெறுவதில் மட்டுமே பாஜகவின் கவனம் உள்ளது எனவும், பிரதமர் மோடி வெறுப்புணர்வை வளர்த்து வருவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு.
பிரஜ்வல் போன்றவர்களை தப்பிக்க விட்டுவிட்டு மக்கள் விரும்புவர்களை கைது செய்கிறார்கள் என பாஜகவை விமர்சித்திருக்கிறார் சந்திரசேகர ராவின் மகள் கவிதா.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான நடவடிக்கைகள், வரும் 20ஆம் தேதிக்கு பிறகே தொடங்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்.
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல். இந்நிலையில், வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில், 10 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து நிர்மலா தேவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு.
உயிரிழந்த நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமாரின் 2 மகன்களிடமும் காவல்துறையினர் 2 ஆவது நாளாக விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில், எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளேன் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு பேட்டி.
சென்னையில் மற்றுமொரு நாய்க்கடி சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தவகையில், ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வளர்ப்பு நாய் கடித்து சிறுவன் காயம் ஏற்பட்டது.
பூங்காவுக்கு நாய்களை அழைத்து செல்ல கட்டுப்பாடு விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை.
பழனி அருகே பேக்கரிக்குள் புகுந்து ஊழியர் மீது மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு, தாக்குதல் நடத்திய இளைஞர்களுக்கு வலைவீச்சு.
சென்னையில் உரிமம் இன்றி செயல்பட்ட 55 ஸ்பாக்களுக்கு சீல் வைத்து, அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு தனிப்படை காவல்துறை நடவடிக்கை.
ஜாபர் சாதிக்கிடம் வாக்குமூலம் பெறும்போது வழக்கறிஞர் உடனிருக்க அனுமதி கோரிய வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
ஜாஃபர் சாதிக் விவகாரத்தில் இரையாகியுள்ளேன் என திரைப்பட இயக்குநர் அமீர் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி.
மத்தியப் பிரதேசம் மாண்ட்லா மாவட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில், அடுத்தடுத்து 3 கடைகள் தீப்பற்றியதால் மக்கள் பதற்றம்.
ஹரியானாவில் ஆளும் பாஜக அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்ற 3 சுயேச்சை வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், தேர்தலுக்காக பிணை கோருவதில் தவறென்ன? என அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி.
ரஃபாவின் எல்லைகளை கடந்து இஸ்ரேலின் ராணுவ டேங்குகள் சரமாரி தாக்குதலில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் இடம் பெயர்வு.
அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரை சூறையாடிய சூறாவளியால், ஏராளமான குடியிருப்புகள் சேதம்.
ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த டெல்லி கேப்பிடல்ஸ். இந்நிலையில், பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தல்.
ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் - லக்னோ அணிகள் பலப்பரீட்சை. ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேற இரு அணிகளும் தீவிரம்.
சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12- ஆம் தேதி சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதல்.இந்நிலையில், ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை தொடக்கம்.