HeadLines Today|தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் வாக்கு சதவீதம் குறைவு? To ஏற்றமதி செய்யப்பட்ட ஏவுகணை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மக்களவை தேர்தலின் வாக்கு சதவீதம் முதல் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஏற்றமதி செய்யப்பட்ட ஏவுகணை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
Published on
  • தமிழகத்தில் 39 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவானது. இதில், சுமார் 63 விழுகாடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 72.09 விழுக்காடு வாக்குகளும், புதுச்சேரியில் 78.80 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் .

  • தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 விழுக்காடு வாக்குகளும், குறைந்த பட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 67.35 விழுக்காடு வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல்.

  • தமிழகத்தில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்களுக்கு சீல்வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

  • விளவங்கோடு இடைத்தேர்தலில் இரவு 7 மணி வரை 65 .40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், பிரேமலதா, சீமான்,கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் ஜனநாயக கடமை ஆற்றினர்.

  • ரஷ்யாவில் இருந்து வாக்களிக்க வந்தார் விஜய்.மேலும், காலையிலேயே காத்திருந்து வாக்களித்த அஜித்.

  • தள்ளாத வயதிலும் வாக்குச்சாவடிகளுக்கு வந்து முதியவர்கள் வாக்களித்தனர்.மேலும், முதல்முறை வாக்காளர்களும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

  • நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் ஓட்டு பதிவாகவில்லை என கூறி வேட்பாளர் வாக்குப்பதிவை நிறுத்தினார். இந்நிலையில், வாக்குச்சாவடியில் இருந்து மத்திய சென்னை வேட்பாளர் கார்த்தியேகன் வெளியேற்றப்பட்டதால் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.

  • திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் பாலு குற்றச்சாட்டினை முன்வைத்தநிலையில், கட்சி நிர்வாகிகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • தமிழகத்தில் வாக்களிக்க சென்ற 4 பேர் வாக்குப்பதிவு மையத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்.

  • முதியவர்கள்,நடிகர் சூரி உள்ளிட்ட சிலருக்கும் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க இயலாமல் அதிருப்தியில் ஏமாற்றம் அடைந்தனர்.

  • வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தொடர்பான புகார்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டியளித்துள்ளார்.

  • மணிப்பூரில் பல்வேறு தொகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தி வாக்காளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இந்நிலையில், வாக்குச்சாவடிக்குள் புகுந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வன்முறை கும்பல் எரித்ததது.

  • உலகை போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் நாட்டை காக்க பாஜக தலைமையில் வலுவான அரசு தேவை என மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

  • இடஒதுக்கீட்டு கொள்கையை தொடமாட்டோம், வேறு யாரையும் தொடவும் அனுமதிக்கமாட்டோம் என்று அரசமைப்பை மாற்றப்போவதாக கூறப்படுவதற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

  • இந்திய கடற்படையின் தற்போதைய தளபதியின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதி முடியவுள்ள நிலையில் அடுத்த தளபதியாக தினேஷ்குமார் திரிபாதி நியமிக்கப்படுவார் என அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

  • அமலாக்கத்துறை தனது உணவு விவகாரத்தை தேவையில்லாமல் அரசியலாக்குகிறது என தினசரி மருத்துவரை ஆலோசிக்க அனுமதிக்ககோரி நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வாதம்.

  • இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது.

  • ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியை லக்னோ அணிஎட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த்தியது. இந்நிலையில், மூன்றாவது தோல்வியை சந்தித்தது சென்னை அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com