பயிர்காப்பீட்டு செய்ய இன்றே கடைசி நாள்; சொதப்பிய இணையதளம், தவிக்கும் விவசாயிகள்!

பயிர்காப்பீட்டு செய்ய இன்றே கடைசி நாளாக இருக்கும் நிலையில், இணையதளம் சரிவர வேலை செய்யாததால் காப்பீடு செய்யமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சுமார் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக 10 லட்சம் ஏக்கர் 11 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்படுகின்ற நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள், போர்வெல் மற்றும் மழை நீரை நம்பி தெளிப்பு சாகுபடிகளை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பயிர் காப்பீடு செய்வதற்கு இன்றைய தினம் கடைசி நாள் என்று அறிவித்திருந்த நிலையில், பல விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் இணையதளமானது சரிவர வேலை செய்யாமல் இருப்பதால் விவசாயிகள் காப்பீடு செய்வதில் காலதாமதம் ஆகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com