வேட்புமனுத்தாக்கல் இன்றோடு நிறைவு.. விக்கிரவாண்டி தேர்தலில் மும்முனை போட்டி! களம் எப்படி?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி புதிய தலைமுறை
Published on

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவித்த தேர்தல் ஆணையம், அங்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்தது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்னியூர் சிவா, தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதேபோல், பாமக வேட்பாளர் சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிராமி ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

விக்கிரவாண்டி
தலைப்புச் செய்திகள் | விஷச்சாராய மரணங்கள் 49-ஆக உயர்வு To நீட் தேர்வுக்கு எதிராக காங். போராட்டம் வரை

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24ஆம் தேதி நடைபெறும்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் கோப்புப்படம்

வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு 26ஆம் தேதி கடைசிநாளாகும். அடுத்த மாதம்10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 13ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக போட்டியிடவில்லை.

விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: புறக்கணித்த காரணம் சொன்ன இபிஎஸ்... மெல்ல மெல்ல சூடாகும் அரசியல் களம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com