#TopNews: டெல்லி தேர்தல் முடிவுகள் முதல் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் வரை..!

#TopNews: டெல்லி தேர்தல் முடிவுகள் முதல் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் வரை..!
#TopNews: டெல்லி தேர்தல் முடிவுகள் முதல் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் வரை..!
Published on

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கெஜ்ரிவால் நம்பிக்கை. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தரைமட்டமாகிவிடும் என பாரதிய ஜனதா கருத்து.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் இந்திய சுற்றுப் பயணத்தை உறுதி செய்தது அதிபர் மாளிகை. வருகிற 24-ஆம் தேதி மனைவியுடன் பயணம் மேற்கொள்வதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு.

பாரதிய ஜனதா மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் இன்று தவறாமல் அவையில் ஆஜராக உத்தரவு. முக்கிய மசோதா நிறைவேற்றப்பட இருப்பதாக கட்சியின் கொறடா அறிவிப்பு.

பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒழிக்க பாரதிய ஜனதா முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு. இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு ஆபத்து வந்துகொண்டிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்.

உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகிறது அதிமுக. மாவட்டச் செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற விஏஓக்கள் தேர்விலும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு. 7 லட்சம் ரூபாய் கொடுத்து வேலைக்கு சேர்ந்த இரண்டு விஏஓக்களை கைது செய்தது சிபிசிஐடி

பொருளாதாரம் கவலைக்கிடமான வகையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக ப.சிதம்பரம் சாடல். அடுத்த காலாண்டில் வளர்ச்சி ஏற்படும் என ஜோதிடர்களை போல அரசு ஆரூடம் கூறுவதாக விமர்சனம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com