'ஸ்புட்னிக் லைட்' கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி

'ஸ்புட்னிக் லைட்' கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி
'ஸ்புட்னிக் லைட்' கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி
Published on

கொரோனாவை தடுக்க, ஒரு தவணை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி வழங்கியிருக்கிறது.

இது இந்தியாவில் அனுமதிக்கப்படும் 9-வது தடுப்பூசி மருந்து என்றும் தொற்று நோய்க்கு எதிரான நாட்டின் கூட்டுப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் உள்ளிட்டவற்றை நிபுணர் குழுவில் விளக்கி டாக்டர் ரெட்டிஸ் லேப்ரட்டரிஸ் நிறுவனம் அவசர கால பயன்பாடு மற்றும் பூஸ்டர் தடுப்பூசியாக பயன்படுத்த ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அனுமதி கோரியது. ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி 29 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தது. இதையடுத்து அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை செலுத்திய 21 நாட்களுக்குப் பிறகு கொரோனாவிலிருந்து 65.4 சதவிகிதம் பாதுகாப்பு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு தவணைகளை கொண்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தமிழகத்தில் 6,200-க்கும் கீழ் குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com