குரூப் 4 தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அதிகாரிகள், “குறிப்பிட்ட ஒரு பகுதியில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற காரணத்திற்காக மட்டும், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் முறைகேடு என்ற முடிவுக்கு வருவது தவறு.
கடந்த காலங்களிலும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளில் தட்டச்சர் பிரிவுகளில் காஞ்சிபுரம், சங்கரன்கோவில் பகுதிகளில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் ஸ்டெனோ, டைப்பிஸ்ட் தேர்வுகளில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் இருந்து 400-க்கும் அதிகமான நபர்கள் தேர்ச்சி பெற்ற விவகாரத்தில் இதுவரை தேர்வாணையத்திற்கு எவ்வித நேரடியான புகார்களும் வரவில்லை. அங்கு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புகளும் குறைவு.
குறிப்பிட்ட சம்பவத்தில் புகார் வந்தால் மட்டுமே தேர்வாணையம் அது குறித்து கவனத்தில் கொள்ளும்.
டி.என்.பி.எஸ்.சி
காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர், தேர்வர்களின் ஓ.எம்.ஆர் விடைத்தாள்கள் அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அப்போது தேர்வர்கள் தங்களுடைய ஓ.எம்.ஆர் தாள்களை பெற்று ஆய்வு செய்து தவறுகள் இருந்தால் பணியாளர் தேர்வாணைய கவனத்திற்கு கொண்டு வரலாம்” என்றனர்.